மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் மின்மாற்றியில் பழுதுபார்த்த லைன் மேன் உயிர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி நடுக்கரையை சேர்ந்தவர் கணேசன் (49) இவர் செம்பனார்கோயில் மின்வாரியத்தில் நிரந்தர ஒயர் மேனாக பணிபுரிந்து வந்தார் . 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கணேசன் இன்று இரவு 7மணி அளவில் முடிகண்ட நல்லூர் ரசூல் கொள்ளை அருகில் உள்ள மின்மாற்றியில் பழுது சரி செய்ய முற்பட்டபோது மேலே இருந்த உயர் மின்னழுத்த கம்பி அறுந்து ஆப் செய்யும் ராடில் பட்டிருந்ததை கவனிக்காமல் கை வைத்த போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இறந்த கணேசனுக்கு ஹேமா (40) என்ற மனைவியும் தனலட்சுமி (13) என்ற மகளும் , முத்துக்குமரன் (12)) என்ற மகனும் உள்ளனர். மின்சாரத் துறையில் நிரந்தரப் பணியாளராக பணியாற்று வரும் கணேசன் லைன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற நிலையில் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
