செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் லேசான பனிமூட்டம் நிலவி வருவதால் வாகனங்கள் மின் வழக்கை எறிந்தபடி மெதுவாக சென்றன.
செங்கல்பட்டு மாவட்டம் பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மெதுவாக செல்கின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள
தேசிய நெடுஞ்சாலை திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சாலைகளில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டன மேலும் மலைப்பகுதி மற்றும் விவசாய நிலங்களிலும் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்தது
இதனைத் தொடர்ந்து தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் அது சுற்றி உள்ள பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இன்று அதிகாலை முதல் இந்த பனிப்பொழிவானது சாலைகளில் அதிக அளவில் காணப்பட்டது.
