வாணகிரி மீனவ கிராமத்தில் பசுமையை விதைப்போம்,இயற்கையை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி கிராமத்தில் பசுமையை விதைப்போம்,இயற்கையை காப்போம் விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆண்கள், பெண்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.தர்மகுளத்தில் தொடங்கி வானகிரி வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் பசுமையை விதைப்போம்,இயற்கையை காப்போம் என விழிப்புணர்வு வாசகம் பதிக்கப்பட்ட டீ சர்ட்டை அணிந்து ஓடினர். இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பெண்கள் என 500 க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்ட இந்த போட்டியினை பூம்புகார் காவல் ஆய்வாளர் விஜயா கொடியசித்து துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் மாணவர்களுக்கு இணையாக பெற்றோர்களும் பங்கேற்று பரிசு பெற்றது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றது.வெற்றி பெற்றவர்களுக்கு வானகிரி மீனவ கிராமத்தின் சார்பாக பதக்கங்கள் கேடயம் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
