பீஜிங்: சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு விழாவில் 25க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவையொட்டி, தலைநகர் பீஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் சீன அரசு சிறப்பு ராணுவ அணிவகுப்பை நடத்தியது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பில் சீனாவின் அதிநவீன போர் விமானங்கள், கண்டங்கள் கடந்தும் பறக்கும் அணு ஏவுகணைகள், நீர்மூழ்கி ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இதோடு, கீழ்க்கண்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர் :
ஆர்மினியா பிரதமர் நிகோல் பாஷினியன்
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ
கம்போடியா அரசர் நோரோடோம் சிஹாமோனி
கியூபா அதிபர் மிகுவல் டயாஸ்-கனெல்
வியட்நாம் அதிபர் லுவாங் குவோங்
இந்தோனேசியா அதிபர் பிரபோவா சுபியாண்டோ
ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன்
கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ்
கிர்கிஸ்தான் அதிபர் சதீர் ஜபரோவ்
லாவோஸ் அதிபர் தோங்லோன் சிசோலித்
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு
மங்கோலிய அதிபர் உக்னாகின் குரேல்சுக்
மியான்மர் ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங்
நேபாள அதிபர் கே.பி. சர்மா ஒலி
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்
காங்கோ அதிபர் டெனிஸ் சசோ நுகுசோ
செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக்
ஸ்லோவாக் பிரதமர் ராபர்டோ பிகோ
தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான்
துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டி முகமடோவ்
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோவ்
ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் மங்காக்வா
இந்த நிகழ்வு மூலம் சீனா, தனது ராணுவ திறனையும் உலகளாவிய நட்புறவையும் வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.