மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் தனது இடத்துடன் சாலை புறம்போக்கை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், வீட்டின் முன்பு வாகனங்களை போட்டு சாலையில் போவோருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தனது சொந்த பட்டா இடத்தில்தான் சாலையே உள்ளதாகவும், அதனை ஆக்ரமித்து ரோடு அமைப்பதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வேலு.குபேந்திரன் வழக்கு தொடர்ந்து வழக்கு எண். 48/2023 நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் மூலம் இடம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக வருவாய்த் துறையினர் கட்நத 1ஆம்தேதி சாலையை அளவீடு செய்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் வீட்டு வேலியை பிரித்து அவர் வீட்டு வாசலில் இருந்து வெளியேற முடியாதவாறு சாலையில் போட்டுள்ளனர். செல்போனில் படம் பிடித்த இளம் வழக்கறிஞர் சந்தோஷ் என்பவரை கல்லைக் கொண்டு எரிந்து தாக்க முற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. மேலும் வழக்கறிஞர் கமாலுதீன் என்பவருடைய கார் டயரை பஞ்சர் ஆக்கி சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் இருதர்பபையும் சேர்ந்த வழக்கறிஞருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர் சங்கமித்திரன் மீதும், வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளில் ரமேஷ், அலெக்சாண்டர், சுரேஷ், முருகன், மோகன், பூசம், பொன்னுதுரை மற்றும் சிலர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் வேலியை அப்பகுதி மக்கள் சவ ஊர்வலத்தினபோது தீவைத்து கொளுத்தினர். இந்நிலையில் இன்று மாப்படுகை கிராமமக்கள் 70க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எலஏ வேலு தெருவின் ஆக்ரமிப்பை அகற்றி புதைக்கப்பட்ட எல்லைக்கல்லை பிடிங்கி எறிந்த வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமபெண்கள், கிராமவாசிகளிடம் அத்துமீறி மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் சங்கமித்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி: 1.கிராமவாசி 2. வேலுகுபேந்திரன் வழக்கறிஞர்.
