தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன் எழுதிய ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு மேடையில் இருந்து 26 தமிழர்கள் மீட்பு என்ற நூலின் அறிமுக விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்படாதவர்களுக்கும், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியதற்கு எதிராக தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன் தமிழகம் தழுவிய இயக்கத்தை நடத்தினார். அதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, 26 மரண தண்டனை கைதிகளில் 22 பேரை உச்ச நீதிமன்றம் மரண தண்டனையில் இருந்து விடுவித்தது. இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு மேடையில் இருந்து 26 தமிழர்கள் மீட்பு என்ற நூல் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நூலின் அறிமுக விழா மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உலகத் தமிழர் பேரமைப்பு துணைத்தலைவர் முருகேசன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். இதில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
