மன்னார்குடி அருகே குத்து விளக்கு பூஜை

மன்னார்குடி அருகே குத்து விளக்கு பூஜைக்காக சிறுவர்கள் விளக்குகளை ஏற்றி கிராமத்தினை சுற்றி பொதுமக்களை அழைத்து வந்தது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் விசாலட்சி முத்துமாரியம்மன் கோவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது . இந்த கோவிலில் ஐயப்ப பக்தர்களின் 29- ம் ஆண்டு படி பூஜையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது . சன்னதியில் முன்பு பிரதான விளக்கினை ஏற்றி வைத்து அதற்கு முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க குங்குமம் மற்றும் மலர்களை தூவி அர்ச்சனை செய்தனர். உலகில் அன்பு, அமைதி ஏற்பட வேண்டியும், பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திட வேண்டியும் . தமிழகத்தில் மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் . நோய் தொற்றிலிருந்து பொது மக்கள் மீண்டு வரவும் , அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்க வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் பெண்கள் முன் வைத்திருந்த குத்துவிளக்கை அம்மனாக பாவித்து தீப அலங்காரம் காட்டினர் இந்த நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது . முன்னதாக 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தட்டில் பூ.குங்குமம் அகல் விளக்கு ஏந்தியவாறு தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கிராமத்தில் உள்ள அனைவரையும் குத்து விளக்கு பூஜைக்கு அழைத்து வந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

FILE NAME : TVR-25-12-2025-MANNARGUDI 1008 VILAKKU POOJA NEWS.

Exit mobile version