கிழக்கு ராஜபோகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் கோயில் தோரண நுழைவுவாயில் கும்பாபிஷேகம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயில் கிழக்கு ராஜபோகம் அருகே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் கோயில் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம். தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகும். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்து இக்கோயிலின் அருள் பாலித்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் கிழக்கு ராஜகோபுரம் அருகே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மடவிளாகம் வீதியில் ராஜகோபுரம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ராஜகோபுர அமைப்பில் கோயில் தோரண நுழைவு வாயில் அமைக்கப்பட்டு சுவாமி – அம்பாள், விநாயகர், திருஞானசம்பந்தர் – சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்தது.
இன்று கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது. முன்னதாக இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடாகி தோரண வாயில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.

Exit mobile version