சீர்காழி அருகே 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமிளங்காடு கிராமத்தில் ஆதி நாகலோக கிராமத்தில் விஸ்வரூப திருக்கோலத்தில் எங்கும் காண முடியாத அளவில் 18 அடி உயரம் கொண்ட 10 தலைகளோடு, 10 கரங்களுடன், 10 விதமான ஆயுதம் ஏந்தி நாக கொடை பிடித்து காட்சி தரும் ஆதி நாக அதர்வன பத்ரகாளி தேவி கோயில் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி தீபா ராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்கிட புறப்பட்டு 18 அடி உயரம் கொண்ட அதர்வன பத்ரகாளி தேவிக்கு உற்சவர் பத்ரகாளி தேவி சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
