மயிலாடுதுறை அருகே 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஐந்து கோயில்களின் கும்பாபிஷேகம் , கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும்போது ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிளியனூர் கிராமத்தில் ஸ்ரீ வெற்றி விநாயகர் , ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ அக்னிவீரன் , ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்மன் , ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது. இந்த ஐந்து ஆலயங்களின் கும்பாபிஷேகம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து திருப்பணிகள் நிறைவுற்று நேற்று முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை நான்கு காலையாக சாலை பூஜைகள் நிறைவுற்று முதலில் உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் ஆலயத்தில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதேபோன்று செம்பனார்கோவிலில் உள்ள உமாமகேஸ்வரர் திருக்கோயிலிலும் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
