கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்
திரளான பக்தர்கள் தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிசேகம் நடைபெற்றது,
முன்னதாக கடந்த 19 ம் தேதி கும்பாபிஷேகத்தை ஒட்டி திருவிழா துவங்கியது. தினமும் காலை நடைத்திறப்பு , கணபதி ஹோமம், தீபாராதனை, அத்தாழ பூஜை , பிரம்ம கலச பூஜை என சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று கலாசபிஷேகமும் அதனை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வெள்ளிமலை ஶ்ரீ சுவாமி
சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
