கொக்கூர் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்

கொக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்; கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் 200 வருடங்களாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களின் பெரு முயற்சியின் காரணமாக, சிதிலமடைந்த கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 24-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில், பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க மகா கும்பாபிஷேகம் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்ன மூலவர் திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் சுவாமி மற்றும் பரிவாராம் மூர்த்திகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Exit mobile version