மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் , ஒரு தலை காதல் , இரு தலை காதல் என அனைத்தும் தோற்றுவிடும் என்றுமே சுய காதல் (self love) மட்டும்தான் ஜெயிக்கும் என மயிலாடுதுறை அருகே நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் கேபிஒய் பாலா மாணவர்களுக்கு அறிவுரை :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக கேபிஒய் பாலா மற்றும் நகைச்சுவை நடிகர் அமுதவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பின்னர் மேடையில் கலகலப்பாக பல்வேறு திரைப்பட நடிகர்களின் குரல்களில் இருவரும் பேசி அசத்தினர். அங்கு வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். அப்போது பேசிய கேபிஒய் பாலா மாணவர்கள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் , அப்பா அம்மா மற்றும் ஆசிரியர்களின் பேச்சை கேட்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். பள்ளிப் பருவ மாணவர்கள் ஆகிய நீங்கள் மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் , ஒரு தலை காதல் , இரு தலை காதல் என அனைத்தும் தோற்றுவிடும் என்றுமே சுய காதல் (self love) மட்டும்தான் ஜெயிக்கும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவன் ஒருவன் காந்தாரா வேடம் அணிந்து தத்துரூபமாக மேடைக்கு வருகை தந்து நடனமாடி விழிப்புணர்வு நாடகத்தில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

















