பாலியல் புகார் எதிரொலி ; கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் இடைநீக்கம்

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, அவர் இன்று கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாலக்காடு தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல், ‘வாட்ஸ்அப்’ மூலம் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், ஹோட்டலில் தனியாக வருமாறு அழைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டினார்.

அவர் பெயரை நேரடியாக குறிப்பிடாத போதிலும், ஊடகங்களில் ராகுல் என தகவல் வெளியாகியது. பின்னர், பல பெண்களும் ராகுலுக்கு எதிராக புகார்கள் அளித்தனர். இதனால், கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இந்நிலையில், “அவர் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்” என பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டம் தொடர் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதிகரித்து வரும் அழுத்தத்தை முன்னிட்டு, காங்கிரஸ் உயர் நிலை குழு இன்று அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

Exit mobile version