கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இருவரையும் சிபிசிஐடி போலீசார் 2 நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்தனர். கடந்த 6 ம் தேதி சி பி சி டி போலீஸார் நீதிமன்றத்தில் சுர்ஜித் மற்றும் அவர் தந்தை சரவணன் விசாரணை கிடைக்க மனு தாக்கல் செய்தனர்.

7 ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்துவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு JM 2 தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சுர்ஜித் மற்றும் அவர் தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுக்க அவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சிவசூர்ய நாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார். சி பி சி ஐ டி போலீசார் விசாரணைக்கு சென்றால் இருவருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே இருவரையும் கைது செய்யும் போது கைது நடவடிக்கைகள் முறையாக பின்பற்றவில்லை. தந்தை சரவணன் கைது செய்ததும் சட்டவிரோதமானது என வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி ஹேமா கூறும்போது தற்போது மனு மீதான விசாரணை நடப்பதால் கைது நடவடிக்கை சட்டவிரோதமா என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது என்றார். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மனுவை ஏற்று, 2 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவலில் சுர்ஜித் மற்றும் சரவணனை எடுக்க உத்தரவிட்டார் நீதிபதி ஹேமா. மீண்டும் வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சுர்ஜித் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சரவணன் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Exit mobile version