தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல், முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும், தவெக தலைவர் விஜயையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
