2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை தொடரின் மூன்றாம் கட்டத்தில், தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபடுகிறார். நாமக்கலில் காலை நிகழ்ச்சி முடிந்த பின்னர், விறுவிறுப்பான மாலை நேரத்தில் கரூருக்குப் புறப்பட்டார் விஜய்.
இந்த சூழலில், கரூர் நகரில் திமுக சார்பில் விஜய் மீது எதிர்ப்புப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர்களில் “சும்மா தெரியாம உளராதீங்க அண்ணா… உங்களது தகவல்கள் எல்லாம் செக் பண்ணுங்க… தமிழ்நாட்டு வளர்ச்சியை பாருங்க அண்ணா” போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் மற்றொரு போஸ்டரில், “விஜய் ஊழலை ஒழிக்க வந்திருக்கேன்” எனக் குறிப்பிடப்பட்டு, வருமான வரித் துறை விதித்த 1.5 கோடி அபராதம் மூலம் ஊழலை அகற்ற வேண்டும் என்ற பரிந்துரையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் பரப்புரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என, ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில், திமுக சார்பில் நகர மேம்பாட்டுக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பல நலத்திட்டங்கள் நடைபெற்றுள்ளதாக போஸ்டர்கள் குறிப்பிடப்படுகின்றன.
கரூர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள், தேர்தல் பரப்புரையை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளன.