கரூர் கூட்ட நெரிசல் : தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்

கரூர் வேலுச்சாமிபுரில் கடந்த 27ஆம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது அடுத்த இரண்டு வாரங்களுக்கான சுற்றுப்பயணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக தவெக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கழகத்தின் வெளியீட்டில், “நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இந்த சூழலில், அனைத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. புதிய தேதி மற்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, கரூர் சம்பவத்தின் பின்னடைவுகளை ஆராய்ந்து, சமூகத்தின் உணர்வுகளை மரியாதையுடன் மதிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version