மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், மதுரை ஐகோர்ட்டின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று மாலை திடீரென மலைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் படி: 6ஆம் நூற்றாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்த தீபத்தூண் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு பதிலாக, பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்ற முடிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு.
இது பாரம்பரிய வழக்கத்துக்கு முரணானது, ஆகமத்துக்கும் எதிரானது, மேலும் பக்தர்கள் இடையே குழப்பம் மற்றும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக்கூடும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது: 6ம் நூற்றாண்டு முதல் தீபத்தூணில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் தொடர்கிறது. 10 மைல் தூரத்திலிருந்தே பக்தர்கள் காணும் வகையில் தீபத்தூண் வடிவமைக்கப்பட்டது. பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றுவது ஆகமத்தை மீறுகிறது. வழக்கத்துக்கு மாறாக மாற்றம் செய்யும் முடிவு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும்.
தீபத்தூணில் மட்டுமே தீபம் ஏற்றவேண்டும் என்பது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடை தூண்டும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றுவது ஆகமத்துக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. மலை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தீபம் ஏற்றுவதற்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட வேண்டியது அவசியம். தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலைத் தர்கா நிர்வாகம் இரண்டையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க உத்தரவிட்டார். அவர்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கவும், வழக்கை நவம்பர் 24-க்கு ஒத்திவைத்தார்.
விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தீபத்தூண், பிள்ளையார் கோவில் தீபமண்டபம், தீபம் ஏற்ற திட்டமிடப்பட்ட இடங்கள் அனைத்தையும் பார்த்தார். வழக்கில் எழுப்பப்பட்ட ஆட்சேபனை களையும், பாரம்பரிய இடத்தையும் நேரில் ஆய்வு செய்தது கவனத்தை ஈர்த்தது. நீதிபதியின் திடீர் ஆய்வு காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் ஒரு வகை பரபரப்பு நிலவியது.
