நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வஹாப்.இவர் பேட்டை சுத்தமல்லி கோடீஸ்வரன் நகர் கே டி சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கராத்தே துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.
இவரிடம் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் பயிற்சிக்காக வந்து படித்து வருகின்றனர் இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகளும் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அந்தச் சிறுமியை பயிற்சி மையத்திற்கு அழைத்து வந்து விட்டு செல்லும் வழக்கத்தை தாய் கொண்டுள்ள நிலையில் கராத்தே மாஸ்டருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் அந்தப் பெண் கராத்தே மாஸ்டர் இடம் பேச்சு வார்த்தையை துண்டித்த நிலையில் தொடர்ந்து அந்தப் பெண்ணை அவர் தொந்தரவு செய்து வந்துள்ளார் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கராத்தே மாஸ்டர் மீது சுத்தமல்லி போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கில் வழக்குப் பதிவு செய்து கராத்தே மாஸ்டர் அப்துல் வகாபை கைது செய்தனர். கராத்தே கற்றுக் கொள்ள வந்த சிறுமியின் தாயாரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமியின் தாயரிடம் பாலி*யல் அத்துமீறிய கராத்தே மாஸ்டர்
