பெரியகுளத்தில் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் 55 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி) 55 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த 55 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது
இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
இதில் சர்வதேச சைக்கிள் வீரரான சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்
