கன்னியாகுமரி மாவட்ட வாக்களர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களிடம் வரும் வெள்ளிகிழமைக்குள் வழங்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கூறுகையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாப்புரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் 6 சட்டமன்ற தொகுதிகளில் கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளவாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 97,49 சதவீதம் ஆகும்.
கணக்கீட்டு படிவங்களை திரும்ப வழங்குவதன் மூலம் படிவங்களை சரிபார்த்து, இணையத்தளத்தில் பதிவேற்றுவதற்கான நடைமுறைகளை செய்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் வாக்குசாவடி நிலை முகவர்களிடம் படிவங்களைவரும் வெள்ளிகிழமைக்குள் ஒப்படைத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
