கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஊர்க்காவல் படை அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இன்று 77 வது குடியரசு தினம் நாடு முழுவதும் வெகு விமர்சனம் கொண்டாடப்பட்டு வருகிறது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிலையில் 77 வது குடியரசு தினவிழாவை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்கள் சார்பில் குடியரசு தின விழா இன்று அனுசரிக்கப்பட்டது இதில் கன்னியாகுமரி மாவட்ட வட்டார தளபதி பிளாட்பின் மற்றும் இணை மண்டல தளபதி பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
