2022-ம் ஆண்டு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘காந்தாரா 2’ உருவாகி வருகிறது.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் பணியாற்றிய சிலர் மரணம் அடைந்தது தொடர்பாக, “காந்தாரா” படத்தால் இது ஏற்பட்டது என்ற பேச்சுக்கள் திரை வட்டாரங்களில் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதியும் இல்லை.
இந்தப் படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையை அஜேஷ் லோக்நாத் அமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘காந்தாரா 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.