பாக். ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம் மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

ஆம்ஸ்டர்டாம் : பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் தீவிர மதக் கோட்பாட்டில் செயல்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

நெதர்லாந்து பயணத்தில் இருக்கும் அவர், அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசினார். அதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த சுற்றுலா பயணிகள் படுகொலை குறித்து கருத்து தெரிவித்தார்.

“பஹல்காமில், பயணிகளின் மதத்தை உறுதி செய்த பிறகு, அவர்களது குடும்பத்தினரின் முன்னிலையில் பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இது, மத அடிப்படையிலான தீவிரவாதத்தைக் காட்டும் செயல். காஷ்மீரின் முக்கியமான பொருளாதார ஆதாரமான சுற்றுலாத்துறைக்கு தடையாக இருக்க இது திட்டமிட்டு நடந்துள்ளது,” என்றார் ஜெய்சங்கர்.

மேலும், “பாகிஸ்தானின் தலைமையிடம், குறிப்பாக அதன் ராணுவ தளபதி ஆசிம் முனீர், தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார். அவர் வெளியிட்ட கருத்துகளுக்கும், பஹல்காமில் நடந்த வன்முறைக்கும் தொடர்பு உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version