ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் குமார சங்கக்காரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தனித்துவமாக வெளியிட அணி நிர்வாகம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ பட ஸ்டைலில் உருவாக்கிய சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சங்கக்காரா, 2021 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் கடந்த சீசனில் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். எனினும், அந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்தில் முடித்தது.
இந்த நிலையில், அணியின் இயக்குநராக இருந்த சங்கக்காரா, தற்போது மீண்டும் தலைமைப் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவர் அணிக்காக இரட்டை பொறுப்புகளை வகிக்கிறார்.

















