திருவாரூரில் அறுவடை செய்த  நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவாரூர் தாலுகா பகுதியில் உள்ள கல்யாண சுந்தரபுர ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் வடுவூர் தோப்புத்தெருவினை சேர்ந்தவர் முருகையன் வயது 65 .இவர் அதே பகுதியில் உள்ள மோகன்ரத்னசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பதற்காக மருவத்தூர் பாண்டவைஆறு தடுப்பணை அருகே சாலை ஓரத்தில் நெல் குவியல் ஓரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது இன்று அதிகாலை சிறியரக சரக்கு வாகனமான டாட்டாஏஸ் பால்வண்டி இவர் மீது ஏறி இறங்கியதில் முருகையன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வழியே சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற தாலுகா காவல்நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்பு இறந்தவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர் .
நெல் மூட்டைகளை பாதுகாத்த விவசாயி வாகனம் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

Exit mobile version