மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்றும், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தருவதற்கு யூஜிசி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- யுஜிசி அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டும் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை படிக்க முடியும்.
- ஒருவர், ஒரே நேரத்தில் இருவேறு பட்டபடிப்புகளை நேரடியாக படிக்கவும் முடியும்.
- இருவேறு படிப்பு வகுப்புகளும் ஒரே நேரத்தில் இல்லாதபடி, பல்கலைக்கழகங்கள் பார்த்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
- ஒரு படிப்பை நேரடியாகவும் மற்றும் மற்றொரு படிப்பை தொலைதூர கல்வி அல்லது இணையவழி மூலமாகவும் படிக்கலாம்.
- Ph.D தவிர்த்து மற்ற படிப்புகளுக்கு மட்டும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் பொருந்தும் என யுஜிசி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தார்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டிருக்கிறது.