ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாலிபால் போட்டிகள் துவங்கின. மாவட்டம் முழுவதும் இருந்து 25 அணிகள் பங்கேற்பு:-
ஈஷா யோக மையம் சார்பில் கிராம மாணவ மாணவிகள் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக ஈஷா கிராமோற்சவம் என்ற பெயரில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண இந்த போட்டிகளில் முதல் கட்ட போட்டிகளாக வாலிபால் இன்று துவங்கின மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையத்தின் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 25அணிகள் பங்கேற்றுள்ளன தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இருந்து 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் நாக்அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மாவட்ட அளவிலான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன மேலும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
