March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி… சிறப்பு என்ன..?

by Digital Team
September 18, 2025
in News
A A
0
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி… சிறப்பு என்ன..?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கோவையில் வரும் 21ம் தேதி நடைபெறும் ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா தெரிவித்தார்.

ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், 17-வது ஈஷா கிராமோத்சவம் 2025 போட்டியில் 6 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் நடைபெற்றது.இதில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன.இந்த போட்டியானது கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள், மீனவர்கள்,தினக்கூலித் தொழிலாளர்கள்,இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது.ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்
ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும்.

இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன.இதில் 24 வாலிபால் அணிகளும்,18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன. முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும்.இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டியும் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு 5 லட்சம் ரூபாய்,3 லட்சம் ரூபாய்,1லட்சம் ரூபாய்,50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.

கிராமிய கலை நிகழ்ச்சிகள், இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி,ஒயிலாட்டம்,தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம்,செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம்,கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம் பெற உள்ளது.

வண்ண கோலப் போட்டி மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை,வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளது என்றார்.

Tags: coimbatoreisha
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 SEP 2025 | Retro tamil

Next Post

விஜய்க்கு நீதிபதியிடமிருந்து காரசார கேள்விகள் – அனைத்து கட்சிகளுக்கும் ஒரே விதிமுறைகள் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி ஐகோர்ட் சென்ற தவெக – அவசர விசாரணைக்கு நீதிபதி மறுப்பு

விஜய்க்கு நீதிபதியிடமிருந்து காரசார கேள்விகள் – அனைத்து கட்சிகளுக்கும் ஒரே விதிமுறைகள் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.