“இந்த நேரத்தில் இப்படிப் பட்ட கேள்வி தேவையா ?” – தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எதிர்வினை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

வயது மூப்பு காரணமாக சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷ் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இயக்குநரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான எஸ்.ஏ. சந்திரசேகர், மறைந்த அம்சவேணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

“விஜயகாந்த் மாமியாரும், பிரேமலதா தாயாரும், சுதீஷ் தாயாருமான அம்சவேணி நேற்று வரை நலமாகவே இருந்தார். திடீரென இப்படிப் பட்ட துயரமான சம்பவம் நிகழ்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. தாயார் நலமாக இருந்ததால் பிரேமலதா மீட்டிங்கிற்கு சென்றிருந்தார். அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இதற்கிடையில், ஒரு செய்தியாளர் “கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதங்கத்துடன், “எந்த இடத்தில் வந்து என்ன கேள்வி கேட்பது என்று தெரியாதா? இறப்புக்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே நாங்கள் மன கஷ்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படியான கேள்வி தேவையா?” என்று கூறி, அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

Exit mobile version