தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

திருவாரூர் அருகே தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் பாதிப்பு – புதிதாக மதகு அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர் அருகேயுள்ள தப்பளாம்புலியூர் கிராமத்தின் வழியாக செல்லும் காட்டாற்றில் உள்ள கல்யாணி இயக்க அணை சட்ரஸ் மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. தப்பளாம்புலியூர், காரியாங்குடி, நெம்மேலி, புதுப்பத்தூர், இலங்கைச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்யாணி இயக்க அணை ஷட்டர் மதகு பழுதடைந்து. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் பாசனம் என்பது தடைப்பட்டு வருகிறது. இதனால் ஆற்று நீரை நம்பி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆற்று பாசனத்தை நம்பி சாகுபடி என்பது இனி கேள்வி குறியாகிவிட்டது. எனவே ஷட்டர் மதகு பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதால், முழுமையாக இந்த சட்ரசை இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி காமராஜ் கூறுகையில், எங்கள் கிராமங்கள் முழுமையாக காட்டாற்றின் பாசனத்தை நம்பி தான் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆற்றில் இருந்து கல்யாணி இயக்க அணை சட்ரஸ் மூலம் 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் யயன் அடைந்து வந்தனர். இப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த சுழ்நிலையில் சட்ரஸ் பழுதடைந்ததால் தண்ணீர் பாசனம் தடைப்பட்டு வருகிறது. எனவே உடனியாக இந்த சட்ரசை இடித்து விட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version