IPL 2025 RCB vs DC : க்ருனால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி ப்ளே ஆஃப்பை நெருங்கியது!

டெல்லி:
2025 ஐபிஎல் தொடரில், அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, டெல்லி கேபிடலை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ், கே.எல். ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் இணை ஆட்டத்தால் 20 ஓவர்களில் 163 ரன்களை சேர்த்தது.

தொடக்கத்தில் அதிர்ச்சி:

RCB பதிலடி பேட்டிங்கில் ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது.
அக்ஷர் பட்டேல் ஓவரில் ஜேக்கப் பெத்தேல் வெறும் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துவிட்டு அவுட்டானார். அதே ஓவரில் தேவ்தத் படிக்கலும் ஆட்டம் இழந்த நிலையில் RCB திணறியது.

கோலி-க்ருனால் பார்ட்னர்ஷிப்

அவ்வேளையில் விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்ட்யா களத்தில் நின்று அணியை கூட்டிக்கொண்டு சென்றனர்.
தொடக்கத்தில் ஓரிரு ரன்கள் மட்டும் எடுத்த இருவரும், பின்பு வேகமாக ஆடி பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்து ஸ்கோர்போடை முன்னேற்றினார்கள்.

க்ருனால் பாண்ட்யா 47 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் அடித்தார்.
விராட் கோலி 47 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் குவித்தார்.

இறுதி கட்ட அதிரடி

போட்டியின் இறுதி கட்டத்தில் கோலி அவுட்டான பிறகு, டிம் டேவிட் களத்தில் இறங்கி அபாரமாக ஆடினார்.
19வது ஓவரில் முகேஷ் குமார் பந்துவீச்சில், தொடர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடித்து வெற்றியை நிச்சயமாக்கினார். இறுதியில், RCB அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ப்ளே ஆஃப் நெருங்கிய ஆர்சிபி

இந்த வெற்றியால் ஆர்சிபி 14 புள்ளிகளை பெற்றுள்ளது.
இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரபூர்வமாக செல்லும் வாய்ப்பு உறுதியாகும்

Exit mobile version