இந்தியா உலகில் சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக உருவாகும் – அமைச்சர் சார்பானந்தா சோனாவால்

The Union Minister for Ports, Shipping and Waterways, Shri Sarbananda Sonowal addressing at the inaugural session of IT Conclave 2025, in New Delhi on August 07, 2025.

தூத்துக்குடி, வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலையை மத்திய துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார். தொடர்ந்து 350 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைமுக வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் கப்பல் சரி செய்யும் மையம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால், நாட்டில் 2047 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படும் கடல்சார் வாணிபத் திட்டத்தில் 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீட்டின் மூலமாக இந்தியா கடந்துசார் வாணிபத்தில் உலக அளவில் முதன்மை பெரும் என்றார் முந்தைய 10 ஆண்டுகளை விட கடந்த 11 ஆண்டுகளாக துறைமுகங்கள் மேம்பாடு கப்பல் போக்குவரத்து துறையில் ஏராளமான பாலசித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன சாகர்மாலா திட்டத்தில் 93 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பில் 98 திட்டங்கள் தொடங்கப்பட்டதில் இதுவரை 50 திட்டங்கள் முடிவடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகங்கள் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. வே வு சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமையுள்ளது மேலும் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் கப்பல் சரி செய்யும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடல்சால் வளர்ச்சிக்காக வேகமான
பல சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று அடிக்க மாட்ட பட்டுள்ள 350 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலமாக 2000 பேருக்கு நேரடியாகவும் 5000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றுமகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

வரும் 2030 கடல்சார் தொலைநோக்கு திட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலமாக இந்தியா உலகில் சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக உருவாகும்.
கடல் சார் மேம்பாட்டு திட்டம்
2047 கீழ் வளர்ச்சி திட்டங்கள் திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலமாக உலகில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக பாரதம் உருவாகும். இந்தியாவில் கடல் சார் வாணிக திட்டம் வலுவாக உள்ளதால் அமெரிக்க நாட்டின் வரி உயர்வுக் பற்றி கவலைப்பட தேவையில்லை என்றார்.

முன்னதாக துறைமுக வளர்ச்சி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், மத்திய கப்பல் துறைமுகங்கள் நீர்வழி போக்குவரத்து துறை அரசு செயலர் டி கே ராமச்சந்திரன், துணை செயலர் ராஜேஷ் குமார் சிங், வ உ சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த் குமார் ப்ரோஹித் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version