திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் அறிவியல் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், மறைந்த தண்டவாளம் அரங்கராசு அவர்களின் மகன் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பேசும்போது…
திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்முடைய இயக்கத்தை அழிப்போம் என்று சொல்லிட்டு, எத்தனை பேர் வந்தாலும் அவங்க அத்தனை பேரையும் ஓட விடும் இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம். கலைஞருடைய உடன்பிறப்புகள். இன்னைக்கு பாசிச சக்திகள் பழைய அடிமைகள் பத்தாதுன்னு, புதுப்புது அடிமைகளை தேடி கண்டுபிடிக்கிறாங்க. கண்டுபிடித்து அவர்களுடைய கூட்டணி வச்சுக்கிட்டு வருவாங்க. தேர்தல் நேரத்துல கண்டிப்பா நம்மள எதிர்க்க வருவாங்க. அவங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவோடு ஓட ஓட விரட்ட வேண்டிய நமக்கு கடமை நமக்கு இருக்கிறது. திமுக தொண்டனுக்கு இருக்கின்றது. யாருக்கு இருக்கின்றதோ நமக்கு அதிகமாக இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் கிடையாது. இது தமிழ்நாட்டுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். இது சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடக்கிற தேர்தல். சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையே நடக்கின்ற ஒரு தேர்தல். மாநில உரிமைகளுக்கும் டெல்லி சர்வாதிகாரத்திற்கும் நடக்கிற ஒரு தேர்தல். ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் கழக அணி குறைந்தது 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம். முழுவதும் உள்ள 70000 வாக்குச்சாவடிலும் நிச்சயம் உதயசூரியன் நம்முடைய கூட்டணி சின்னம் ஜெய்த்தாக வேண்டும். அதற்கு ஒரு தொடக்கமாக எனக்கு இந்த திருவாரூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில்.. We are not afraid. U will face the consequences. We are ready to fight you. என்றேன் அத்தனை பேரும் களத்தில் நின்னு உதயசூரியன் நிச்சயமாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறுவார் அப்படி என்ற நிலைமை உருவாக்க வேண்டும் அதற்கான உறுதியை ஐயா திருவிடம் அவருடைய படத்திறப்பு விழாவில் நாம் அத்தனை பேரும் ஏற்போம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது…
SIR பதிவு செய்வதற்கு ஒரு மாதம் பத்தாது என்று தலைவர், தமிழக முதல்வர் ஏற்கனவே கூறி இருக்கிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆன்லைனில் சரி பார்த்தால் தான் யார் யார் விடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். விடுபட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றார்.
















