மயிலாடுதுறையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய புதிய மசோதா எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இச்சட்டத்தை பயன்படுத்தி அவர்களை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கின்றது என்ற திமிர்தனத்தில் உருவாக்க நினைக்கும் புதிய மசோதவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்:- மயிலாடுதுறையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மயிலாடுதுறையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், மத்திய பாஜக அரசு நேற்று அரசியல் சாசத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே உஃபா சட்டம் என்ற பெயரில் பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்மீது விசாரணை இல்லாமல் காலவரையில்லாமல் சிறையில் அடைக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தில் ஏராளமான அறிஞர்கள் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டனர். பின்னர் பொதுமக்களையும் கைது செய்யக்கூடிய வகையில் பிஎன்எஸ் என்ற புதிய சட்டத்தை திருத்தினார்கள். இப்போது, முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதமர் உள்பட யாராக இருந்தாலும் 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவர்கள் தானாகவே பதவி விலக நேரிடும் என்ற புதிய மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சி முதலமைசர்கள், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்ற பெயரில் வழக்குப்பதிவு செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன்மூலமாக பிடிக்காத முதலமைச்சர், அமைச்சர்களை கைது செய்து 30 நாள்களுக்கு மேலாக வைக்கமுடியும்.

இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது. மாநில அரசாங்களின் உரிமைகளுக்கு எதிரானது. இது மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இச்சட்டத்தை பயன்படுத்தி அவர்களை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சட்டங்களை பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கின்றது என்ற திமிர்தனத்தில் தாங்கள் நினைக்கும் வகையில் சட்டத்தை உருவாக்குவது ஜனநாயக நாட்டில் அனுமதி முடியாத ஒன்று. இந்தியாவின் கூட்டாட்சியை மதிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டிய மசோதா இது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்துக்கு உள்ளும், வெளியும் இந்த புதிய மசோதாவை எதிர்த்து வலுமிக்க கண்டன போராட்டங்களை நடத்துவோம். துமிழ்நாடு முதலமைச்சர், கேரள முதலமைச்சர் ஆகியோர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். உடனடியாக இந்த புதிய மசோதவை திரும்பப் பெற வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத்திருமணம் செய்து கொள்பவர்களை ஆணவக்கொலை செய்வது என்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. 2017-2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 65 சாதி ஆணவக்கொலைகள் நடைபெற்றதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி, அரசியல், பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற சாதி ஆணவக் கொலை நடைபெறுவது என்பது மிகப்பெரிய தலைகுனிவு.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், தூண்டுபவர்களை தண்டிக்கக் கூடிய வகையில், சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என நானும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகிய மூவரும் கடந்த 6-ஆம் தேதி தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயமாக அதற்கான சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடும் என்றார்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பந்தலில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, இதுபற்றி அவர்களை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ள திமுக, அதிமுக கட்சிகள் தான் முதலில் கருத்து கூற வேண்டும் என்றார். துப்புரவு பணியாளர்களின் போராட்டம் தொடரத்தான் செய்யும்.

உயர்திமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. பணி நிரந்தம் கூடாது, தனியாருக்கு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு அதில் தலையிட முடியாது, அதேசமயம் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என தொழிற்சங்கம் சார்பில் போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தின் தனியார் மயத்துக்கு ஆதரவான தீர்ப்பாக பார்க்க வேண்டியுள்ளது.

இது துப்புரவு பணிக்கு மட்டுமில்லாமல், அனைத்து பணிகளுக்குமே பொருந்தக்கூடிய தீர்ப்பாக அரசாங்கம் எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த போராட்டம் தொடரும் என்றார். அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ், கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version