கொள்ளையடித்த பணத்தால் கூட்டணியை திமுக வலுவாக வைத்துள்ளது – கே.பி.ராமலிங்கம்

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :-

பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை நிறுவிட அதை வெற்றி கரமாக நிகழ்த்திட எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் 19, 20, 21 ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதில் பாஜக சார்பில் கலந்து கொள்ள உள்ளோம், நவம்பர் மாதத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

செங்கோட்டையன் சொல்லும் ஒருங்கிணைந்த அதிமுக கான்செப்ட்டே தவறு, செங்கோட்டையன் கருத்துக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமும் இல்லை, முதல் நாளிலேயே எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் அமித்ஷா தெரிவித்துவிட்டார், கூட்டணிக்கு யாரை சேர்க்க வேண்டும், சேர்க்க கூடாது என கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முடிவு தான் என தெளிவுப்படுத்திவிட்டோம் மேலும் அதிமுக ஆட்சியை அமைப்பதே பா.ஜக நோக்கம் என்றும் கூடட்ணி கட்சியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என டிடிவி தினகரன் கூறுவது சரியில்லை. மென்மையான தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவார்,

பாஜக தலைவரை விமர்சனம் செய்தால் நாங்கள் தினகரனை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும், ஓட்டு பிரிக்க, தனிப்பட்ட பொறாமையில் கட்சியை ஆரம்பித்துவிட்டு அவர் பேசக் கூடாது, தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த செங்கோட்டையன் போல பலர் வருவார்கள் ஆனால் அது தேர்தலில் எதிரொலிக்காது, பா.ஜனதா செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் தேர்தல் முடியும்வரை யாரும் பா.ஜனதா சந்திக்காது.

திமுக ஸ்டாலின் கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்ற கேள்விக்கு, பதில் அளிக்கையில், மாதம்தோறும் கூட்டணி கட்சிகளுக்கு பணத்தை பிரித்து கொடுக்க எங்கிளடம் வழியில்லை.

கொள்ளை அடித்த பணத்தை திமுகவினர் பிரித்து கொடுக்கிறார்கள், அவர்களுக்கு கொள்கை இல்லை, லட்சியமும் இல்லை , தீவிரவாதமும், போதை மருந்து கடத்தல் ஆகியவை நிறைந்த திமுக அரசை தூக்கி எரிய வேண்டும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து ஆலோசனைகளை வழங்கி உள்ளார் என்ற நோக்கத்துடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது மேலும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என தங்கமணி, வேலுமணி உள்பட பலர் கேட்டதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அது குறித்து உங்கள் கருத்து என்ன ? எனக் கேட்டதற்கு; இல்லாததற்கு எவ்வாறு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என கே.பி ராமலிங்கம் பதில் கூறினார். பின்னர் அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு , ராமலிங்கமே கூறிவிட்டார் என தெரிவித்தார்.

Exit mobile version