காற்றழுத்த தாழ்வு தீவிரம்  டெல்டா முழுவதும் கனமழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் இலங்கை கடலோரத்தை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை தொலைந்து கொட்டுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு நள்ளிரவு வரை பலத்த மழை பதிவாகி, பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம், போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் மீனவ வாழ்வாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு தொடர் கனமழையால் வேதாரண்யம் வேதாரண்யஸ்வரர் கோயில் வெளிப் பிரகாரம் மற்றும் உள் பிரகாரத்தில் 1 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானனர்.
வேதை–திருத்துறைப்பூண்டி சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது. மழை காரணமாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்படும் உப்பு ஏற்றுமதி தடைபட்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் டன் உப்பு குவிந்து கிடக்கிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்புப் பணிக்காக பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் : 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள், 200 நாட்டுப்படகுகள் – மொத்தம் 6,000 மீனவர்கள் தஞ்சை மாவட்டம் : மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் – 146 விசைப்படகு, 4,500 பைபர் படகுகள் – 10,000 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் : கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் – 500 விசைப்படகு – 2,000 மீனவர்கள் வேதாரண்யம் : 27 கிராமங்களை சேர்ந்த 8,000 மீனவர்கள் தொடர்ந்து 3-ஆம் நாளாக கடலுக்குச் செல்லவில்லை.இதனால் 550 விசைப்படகுகள், 3,500 பைபர் படகுகள் மற்றும் நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. தஞ்சை : முழு மாவட்டம் முழுவதும் நள்ளிரவு வரை பலத்த மழை. கரூர் : அதிகாலை 2–3 மணி வரை கனமழை. புதுக்கோட்டை : காலை சாரல் மழை. பெரம்பலூர் : இரவு 7–9.30 வரை மழை; சில இடங்களில் கனமழை. அரியலூர் : நள்ளிரவில் லேசான மழை. திருச்சி : மணப்பாறை, துவங்குறிச்சி, முசிறி, தா.பெட்டையில் மழை; அதிகாலையில் சாரல்.

Exit mobile version