தமிழ்நாடு அரசுடாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம். காலமுறை ஊதியம் வழங்குவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தொழிற்சங்க சட்டப்படியும். தமிழக முதல்வர் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்குவோம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
பணி நீக்கத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் பணி நியமனம், ஒழுங்கு நடவடிக்கை, குறிப்பிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் அதற்கான காலம் உள்ளிட்டவற்றை வரையறை செய்து அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து விவாதித்து பணி விதிகளை உருவாக்கிட வேண்டும் ஏற்கனவே இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும்.
பணிநிரவல் தொடர்பான சுற்றறிக்கை தலைமை அலுவலகத்தால் வெளியிடப்பட்டும் இதுவரை அமல்படுத்தப் படாத சூழ்நிலையே தொடர்ந்து வருகிறது. இதனை உடனடியாக அமல்படுத்த உத்திரவிட வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். டிஜிட்டல் பணி பரிவர்த்தனை நடைமுறையில் டார்கெட் (Target Fix) செய்யக் கூடாது. உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் மண்டல வாரியாக 10 மையங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சரவணன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், சத்துணவு பணியாளர் சங்கம் ஊராட்சி களப்பணியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் தோழமை சங்கத்தின் நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.