சீர்காழி பழைய பாளையம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய & மாநில குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையத்தில்,
நெல் ஈரப்பதம் குறித்து இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபிட் ஷிவாஜ்,ராகேஷ் பராலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், இந்திய உணவுக் கழகம் மேலாளர் (தரக்கட்டுப்பாடு)மோகன் ஆகியோர் ஆய்வில் ஈடுப்பட்டனர்

Exit mobile version