பெண்களுக்கான 13வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இலங்கையில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் (செப்டம்பர் 30) இலங்கையை எதிர்கொள்கிறது.
இதற்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின்றனர். இந்தியா சார்பாக 19 வயதில் உலக கோப்பையை வென்ற ஷைபாலி வரவழைக்கப்படவில்லை. அதேசமயம், காயம் காரணமாக வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி விபரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ஜெமிமா, ரேணுகா, அருந்ததி, கிராந்தி கவுடு, அமன்ஜோத் கவுர், ராதா, யஸ்திகா, ஸ்ரீசரனி, ஸ்னே ராணா.
மாற்று வீராங்கனைகள்: தேஜல், பிரேமா, பிரியா, உமா, மின்னு மாணி, சயாலி.
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி
உலக கோப்பை தொடங்குவதற்கு முன், இந்திய பெண்கள் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை அணியில் இடம்பெற்ற ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ரேணுகா, அருந்ததி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுடு, ராதா, ஸ்ரீசரனி, யஸ்திகா, ஸ்னே ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அமன்ஜோத் கவுருக்குப் பதிலாக சயாலி வாய்ப்பு பெற்றுள்ளார்.