உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் இடையே அலாஸ்காவில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்றாலும், “இது ஒரு நல்ல தொடக்கம்” என இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், அலாஸ்காவில் நடைபெற்ற இந்த சந்திப்பை இந்தியா வரவேற்றுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில்,
“அமைதியை நோக்கிய டிரம்ப் – புடின் தலைமைத்துவம் பாராட்டத்தக்கது. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலேயே முன்னேற்றம் சாத்தியம். உக்ரைன் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வருவதை உலக நாடுகள் விரும்புகின்றன. இந்த சந்திப்பு அந்த நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றம்” என்று கூறியுள்ளார்.

















