“உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா பாடுபட்டு வருகிறது,” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“இந்தியா ஒரு தனித்துவமிக்க நாடு. நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி, தைரியம், பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதை கிடைக்கச் செய்வதற்காகவே நாம் சுதந்திரம் பெற்றோம்.
இன்று உலகம் தடுமாறி வருகிறது. கடந்த 2000 ஆண்டுகளில் பல சோதனைகள் ஏற்பட்டபோதும், பிரச்சினைகளுக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. உலகிற்கு ஒரு தீர்வை வழங்குவது, மதக் கொள்கையில் வேரூன்றிய நமது தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரம்பிய புதிய உலகத்தை உருவாக்குவது – இவை அனைத்தும் நமது கடமை” என்று கூறினார்.

















