துபாய் :
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவிருக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் 17வது ஆசியக் கோப்பையில், ஏ பிரிவில் விளையாடிய இந்திய அணி முதல்தடவையாக சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே பிரிவில் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்குள் நுழைந்தது.
இதன் மூலம், வரும் ஞாயிற்றுக்கிழமை சூப்பர்-4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன. கடந்த லீக் சுற்றில் இந்தியா வலுவாக விளையாடிய நிலையில், அதே ஆதிக்கம் தொடருமா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அதே சமயம், முதல் மோதலில் கைகுலுக்க மறுத்த சம்பவம் சூப்பர்-4 போட்டியிலும் மீண்டும் நிகழுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், கடந்த போட்டியில் பாகிஸ்தான் தேசிய கீதத்தின் போது தவறுதலாக ‘ஜிலேபி பேபி’ பாடல் ஒலித்த சலசலப்பு இன்னும் பேசுபொருளாக உள்ளது.
இந்த முறை, இரு அணிகளும் மைதானத்தில் எப்படி தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றன என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

















