ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர்-4 கட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா – வங்கதேசம் மோதிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சகாப்தமாக ஆடி 75 ரன்கள் குவித்தார். அவருக்கு சுப்மன் கில் (29) மற்றும் ஹர்திக் பாண்டியா (38) சிறப்பான துணை நின்றனர். இதன் பலனாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
பின்னர் 169 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, தொடக்க வீரர் ஷயீப் ஹாசன் 69 ரன்கள் எடுத்தும், பிற வீரர்கள் பெரிய அளவில் பங்களிக்க முடியவில்லை. இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றியால் இந்திய அணி, சூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து இரண்டாவது போட்டியையும் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக திகழ்கிறது. அதே நேரத்தில், இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது.