சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனைகள் நடத்தினர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில், வடபழனி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனை நடைபெறும் பகுதிகளில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், தியாகராய நகரில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்திலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version