நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் மத்திய தொழிற்சங்கத்தின் நான்காவது கிளை திறப்புவிழா
திருநெல்வேலியில் MS கோல்டன் மண்டபத்தில் நடைபெற்ற நேஷனல் பிராண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் மத்திய தொழிற்சங்கத்தின் நான்காவது கிளை திறப்பு மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கட்டுமான அணி மாநிலச் செயலாளர் மாணிக்க விக்னேஷ் மற்றும் மாநில துணைத்தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்திற்கு
NFITU
மாநிலத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆலங்குப்பம் பாலா அவர்கள்
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் எடுத்து கூறி பேசுகையில் சென்னை முதல் கன்னியாகுமரிவரை அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு மத்திய,மாநில அரசாங்கத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் தங்கு தடையின்றி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை வலு சேர்க்கும் வகையில் போய் சேர வேண்டும்
மேலும்
ஆட்டோ ஓட்டுனர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு இரண்டு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் தற்போது அரசாங்கம் வழங்கி வருகிறது அதை 5 லட்சமாக உயர்த்துவதற்கு NFITU தொழிற்சங்கம் முழு ஒத்துழைப்பு ஆதரவு கொடுக்கும் என்பதையும் தெரிவித்திருந்தார்.
இந்தக்கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் பரசுராமன் , பரணிதரன், மகாதேவன், ராமநாதன், கிருபாகரன், சக்தி ட்ரேட் யூனியன் குபேர், மேலும் புதிதாக தொழிற்சங்கத்தில் இணைந்த கூடுவாஞ்சேரி ரமேஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
