விழுப்புரத்தில் திமுக சார்பில் அண்ணா அறிவகம் திறப்பு
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அண்ணா அறிவகம் (District Firewall) திறப்பு விழா பாணாம்பட்டு சாலையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் இரா. இலட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையேற்றார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் துரை. கி. சரவணன், வானூர் தொகுதி பொறுப்பாளர், மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி முன்னிலையில், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்கள் எஸ். சுரேஷ் செல்வராஜ், ஏ. தமிழ்மாறன் ஆகியோர் அண்ணா அறிவகத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
