மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூபாய் 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமையில் செயல் அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் பங்கேற்று அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து 6வது வார்டு தேரடி பகுதியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் எம்எல்ஏ ராஜகுமார் திறந்து வைத்தார்.
