திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே  களத்தூர் பகுதியில்  புதிய அங்காடி கட்டிடம் திறப்பு விழா

வலங்கைமான் அருகே புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் காமராஜ் …

 திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே  களத்தூர் பகுதியில்  புதிய அங்காடி கட்டிடம் திறப்பு விழா.. தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே  Z-795 பட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் களத்தூர் பகுதியில் பொது விநியோக நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.. அதற்கான புதிய கட்டிடம் வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில்..
திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர். காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 12.50 லட்சம் மதிப்பீட்டில்  புதிய பொது விநியோக நியாய விலை கடை கட்டிடத்தை ..  ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
     அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்..." நன்னிலம் பகுதியில் கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம்.. பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம்.. கல்லூரிகளை வழங்கியுள்ளோம்.. பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளோம்.. சாலை வசதி செய்து கொடுத்துள்ளோம்.. மேலும் உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.. என்ற தகுதிகளோடு தான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.. என பேசினார்.
  இந்த நிகழ்வில்... வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்.. மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர்,வலங்கைமான் கிராம ஊராட்சி அதிகாரி முரளி மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் பணியாளர்கள்.. அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் பயனாளிகள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Exit mobile version